நூலகம் & வாசிப்பு மற்றும் ஒருங்கிணைந்த திறன் வளர்ப்பு மையம் திறப்பு விழா | Library & Reading and Integrated Skills Enhancement center Inauguration

17.09.2022 சென்னை,
கே1 செம்பியம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் மற்றும் இளயுகம் அறக்கட்டளை இனைந்து நூலகம் & வாசிப்பு மற்றும் ஒருங்கிணைந்த திறன் வளர்ப்பு மையத்தை திறந்து வைப்பதற்கு அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். நூலகம் என்பது நம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு நீண்ட நாள் கனவு. இந்நூலகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி படிக்கக்கூடிய புத்தகங்களை கொண்டுள்ளது. இதில் கவிதை, இலக்கியம், கட்டுரை, அறிவியல், பொறியியல் போன்ற புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது.
நம் நூலகம் & வாசிப்பு மற்றும் ஒருங்கிணைந்த திறன் வளர்ப்பு மையத்தை  திருமதி. பிரியா ராஜன், மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி, அவர்கள் நமது காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு வருகை தந்து திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நூலகம் திறந்து வைத்ததை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.
கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நம் விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினரும் மேடையில் வீற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை இரசிக்க தயாராகினர்.
நம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் புன்சிரிப்புடன் வாழ்த்தி வரவேற்பதற்காக தன் வரவேற்புரையை துவங்கினார திரு. இரா. கோகுல்நாத், சாரண ஆசிரியர், கே1 செம்பியம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் அவர்கள்.

Comments

Popular posts from this blog

தீபாவளி பண்டிகை 2021 |Deepavali Festival 2021

International day of Non violence | சர்வதேச அகிம்சை தினம்